உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாயிபாபா கோவிலில் ஏகாதச ருத்ரபாராயணம்

சாயிபாபா கோவிலில் ஏகாதச ருத்ரபாராயணம்

கோவை: கோவை நாகசாயி மந்திரில் பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் நுாறாவது பிறந்த ஆண்டை முன்னிட்டு நுாறு சிவாலய ருத்ர பாராயணம் பக்தர்கள் சூழ நடந்தது.பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் நுாறாவது பிறந்த ஆண்டை முன்னிட்டு சிவாலயங்கள் தோறும், 100 சிவாலய ருத்ர பாராயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 50 வது சிவாலயமான மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள ஸ்ரீ நாகசாயி பாபா ஆலயத்தில் ருத்ரபாராயணம் நேற்று நடந்தது.ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில் சாய்பக்தர்கள் ருத்ரபாராயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து சாய்பக்தர்களின் சாய்பஜன் , மங்கள ஹாரத்தியும், பிரசாத வினியோகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை