உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை

தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை

கோவை : கோவை சிவானந்த புரத்தில் வசிப்பவர் வெங்கடேஷ். நேற்று முன்தினம் இவரும் மனைவியும் வேலைக்கு சென்றபின், அவரது பாட்டி சரஸ்வதி மட்டும் வீட்டில் இருந்தார். மதியம் 2:45 மணிக்கு வெங்கடேஷின் மனைவியும் மகளும் வீட்டுக்கு வந்த போது, சரஸ்வதி முகத்தில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். பீரோவில் இருந்த எட்டரை பவுன் நகை மாயமாகி இருந்தது. சரஸ்வதியை மருத்துவமனையில் சேர் த்துவிட்டு, சரவணம்பட்டி போலீசில் வெங்கடேஷ் புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை