தேர்த்திருவிழா ஆலோசனைக் கூட்டம்
அன்னுார்; மேற்றலை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும் பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா ஜனவரி முதல் வாரம் துவங்குகிறது. தேரோட்டம் இரண்டாவது வாரம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கோவில் வளாகத்தில் இன்று மாலை 5:00 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்த்திருவிழாவில் 10 நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பக்தர்கள், அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.