மேலும் செய்திகள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
29-Aug-2025
பொள்ளாச்சி; தமிழ்நாடு மின்வாரிய பணி நிறைவு பொறியாளர்கள் அமைப்பின், பொறியாளர்கள் தின விழா மற்றும் பொறியாளர்கள் சந்திப்பு கூட்டம், மரப்பேட்டை தீரன் சின்னமலை அரங்கில் நடந்தது. தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். பொள்ளாச்சி கொங்கு பேரவை தலைவர் நித்யானந்தம் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து, கர்நாடகா மூத்த பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா, பரம்பிக்குளம் ஆழியாறு நீர் மின் திட்டத்தில் பணிபுரிந்த திறன்மிகு சிவில், மெக்கானிக்கல் மற்றும் மின்னியல் பொறியாளர்கள் குறித்து நினைவு கூறப் பட்டது. மேலும், 7வது ஊதியக் குழு பரிந்துரையின் மீது, ஓய்வூதியர் கூட்டமைப்பு சம்மேளனம் எதிர்காலத்தில் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது, 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர் களுக்கு, 10 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. கூட்டத்தில், செயலாளர் காமாட்சிசுந்தரம், பொருளாளர் ராஜகோபால், ஆலோசகர் சங்கரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
29-Aug-2025