உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரேஷன் பொருட்களை சேதப்படுத்திய யானைகள்

 ரேஷன் பொருட்களை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை: ரேஷன் கடையில் இருந்த பொருட்களை வெளியே இழுத்துப்போட்டு யானைகள் சேதப்படுத்தின. வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் பஜார் பகுதி. இங்குள்ள மக்களுக்கு மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடை வாயிலாக, அத்தியாவசியப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முடீஸ் பகுதிக்கு வந்த இரண்டு யானைகள், அங்குள்ள ரேஷன் கடையின் சுவற்றை உடைத்து, உள்ளே இருந்த அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை வெளியே இழுத்து போட்டு சேதப்படுத்தின. இது குறித்து, கடை விற்பனையாளர் கொடுத்த தகவலின் பேரில், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார் மற்றும் வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று, யானையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டனர். பொதுமக்கள் கூறியதாவது: முடீஸ் சுற்றுப்பகுதியில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. எஸ்டேட் பகுதியில் முகாமிடும் யானைகள் இரவு நேரத்தில் ரேஷன் கடைகளை குறி வைத்து சேதப்படுத்துகின்றன. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அரசின் சார்பில் யானைகள் நடமாடும் பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளை, கன்டெய்னர் கடைகளாக மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ