உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி போனஸ் வழங்க பணியாளர்கள் கோரிக்கை

தீபாவளி போனஸ் வழங்க பணியாளர்கள் கோரிக்கை

வால்பாறை:தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என, வால்பாறை நகராட்சி துாய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர்சங்க நிர்வாகிகள் செல்வக்குமார், சுப்பிரமணி, ராணி ஆகியோர், வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளியிடம் மனு கொடுத்தனர்.மனுவில், 'நகராட்சியில் கடந்த, ஆறு ஆண்டுகளாக தற்காலிக துாய்மை பணியாளர்களாக பணி புரிந்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம்.இந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.துாய்மை பணி மேற்கொள்ளும் எங்களின் குடும்பமும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட, போனஸ் வழங்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி