உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி

 ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி

கோவை: யுனைடெட் டிரேட் பேர்ஸ் இந்தியா சார்பில் அவிநாசி ரோடு, கொடிசியாவில் இந்தியா ஆட்டோமேட்டிவ் கேரேஜ் கண்காட்சி, நேற்று துவங்கியது. கண்காட்சியில் புதிய கார், டூவீலர் மற்றும் கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் கேரேஜ் எக்யூப்மென்ட்ஸ், வீல் அலைமென்ட் மிசினரிஸ், டயர்கள், கார் வாஷ் பொருட்கள் அனைத்தும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. கண்காட்சியை, மாநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர் துரை செந்தமிழ் செல்வன், ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க பொருளாளர் மணி துவக்கி வைத்தனர். யுனைடெட் டிரேட் பேர்ஸ்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாக்கியராஜ் கூறுகையில், ''நாளைவரைநடைபெறும் இக்கண்காட்சியை பார்வையிட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலிருந்து, ஏராளமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை