உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எகிறியடித்த போலீஸ் அணி வீரர்கள்! வாலிபால் போட்டியில் வாவ்

எகிறியடித்த போலீஸ் அணி வீரர்கள்! வாலிபால் போட்டியில் வாவ்

கோவை : அரசுத்துறை ஊழியர்களுக்கான வாலிபால் போட்டியில், ஆண்கள் பிரிவில் கோவை போலீஸ் அணியும், பெண்கள் பிரிவில் மேற்கு மண்டல போலீஸ் அணியும், வெற்றி வாகை சூடின.கற்பகம் பல்கலையில் அரசு ஊழியர்களுக்கான 'முதல்வர் கோப்பை' வாலிபால் போட்டிகள் இரு நாட்கள் நடந்தன. இதில், பெண்கள் பிரிவில் மூன்று அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில், மேற்கு மண்டல போலீஸ் அணி, 25-7, 25-4 என்ற புள்ளிக்கணக்கில் கோவை கல்வி மாவட்ட அணியை வென்று முதலிடம் பிடித்தது. மூன்றாம் இடத்தை அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம் பெற்றது.ஆண்கள் பிரிவில், 9 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுக்களை அடுத்து இறுதிப்போட்டியில், கோவை போலீஸ்(மேற்கு மண்டலம்), 25-11, 25-17 என்ற புள்ளி கணக்கில் ஸ்டிரைக்கிங் போர்ஸ் (வடக்கு) அணியை வென்று, முதலிடம் பிடித்தது. கோவை கல்வி மாவட்ட அணி, 25-11, 25-17 என்ற புள்ளிக்கணக்கில், கோவை மத்திய சிறைத்துறை அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது. அதேபோல், ஆண்களுக்கான கபடி இறுதிப்போட்டியில், 4வது பட்டாலியன் போலீஸ் அணி, 51-34 என்ற புள்ளிக்கணக்கில் கோவை சிட்டி போலீஸ் அணியை வென்று, முதலிடம் பிடித்தது. கோவை தலைவாஸ் அணி, 38-27 என்ற புள்ளிக்கணக்கில் மத்திய சிறை அணியை வென்று, மூன்றாம் இடம் பிடித்தது. பெண்களுக்கான போட்டியில், கோவை போலீஸ் அணி, 34-7 என்ற புள்ளிக்கணக்கில், வி.வி.கே. அணியை வென்று முதலிடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை