உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இறக்குமதி வரி குறைப்புக்கு எதிர்ப்பு; விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

இறக்குமதி வரி குறைப்புக்கு எதிர்ப்பு; விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சோமனூர்; கச்சா பாமாயில், சூரிய காந்தி, சோயா உள்ளிட்டவைகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சோமனூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாமாயில், சோயா, சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்ட கச்சா எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு, 11 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர், ஏர்முனை இளைஞர் அணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இறக்குமதி வரியை குறைத்ததை ரத்து செய்ய வேண்டும், என, வலியுறுத்தி சோமனூரில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏர்முனை இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் சண்முகம், செயல் தலைவர் வெற்றி, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இறக்குமதி வரியை ரத்து செய்ததை திரும்ப பெற வேண்டும், என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.மாநில தலைவர் சண்முகம் கூறுகையில், கள் இறக்க அனுமதித்தால், சாராயம் காய்ச்சுவது அதிகரிக்கும் என, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.கள் குறித்த அறிக்கை திரும்ப பெறாவிட்டால், அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி