உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னூர் பத்திரபதிவு அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

அன்னூர் பத்திரபதிவு அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவில், நான்கு ஊராட்சிகள், மேட்டுப்பாளையம் தாலுகாவில், இரண்டு ஊராட்சிகள் என ஆறு ஊராட்சிகளில் 3850 ஏக்கரில் தொழில் பேட்டை அமைப்பதாக 2021ல் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அறிவித்தது. விவசாயிகளின் போராட்டத்தால் நிலம் கையகப்படுத்தப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த வாரம் மூன்று நாட்கள் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து மீண்டும் கடந்த வெள்ளியன்று பத்திரப்பதிவு துவங்கியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tinfhepb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை கண்டித்து விவசாயிகள் சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அன்னூர் பத்திரபதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது. டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் என 50 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ