அன்னுாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அன்னூர்: பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டும், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெயை ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அன்னூர் அருகே கெம்பநாயக்கன் பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை முன், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.