விவசாயிகள் போராட்டம்
மேட்டுப்பாளையம், ;காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கோரி, மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தாசம்பாளையம், நெல்லித்துறை, ஓடந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள், வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்கு புகுந்து தொல்லை தருவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாகுபலி யானை, நீண்ட நாட்களாக இந்த பகுதிகளில் முகாமிட்டு, விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதையடுத்து, வனத்தில் இருந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியே வருவதை தடுக்க கோரி, நேற்று மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.