மேலும் செய்திகள்
நீரோடை ஓரத்தில் தடுப்பு அமைக்கணும்!
21-Jan-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு - வடசித்தூர் ரோட்டில் உள்ள, தடுப்புகளை நகர்த்தி வைப்பதால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கிணத்துக்கடவு -- வடசித்தூர் ரோட்டில், தினமும் ஏராளமானோர் வாகனங்களில் பயணம் செய்கின்றனர். இந்த ரோட்டில், லட்சுமி நகரில் உள்ள அபாயகரமான வளைவு பகுதியில், வாகன விபத்தை தடுக்க இரண்டு இடத்தில் பேரிகார்டு வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் தடுப்பு உள்ள பகுதியில் மெதுவாக சென்றன. ஆனால், தற்போது இரவு நேரத்தில் வரும் கனரக வாகன ஓட்டுநர்கள் சிலர், இந்த தடுப்புகளை ரோட்டின் ஓரத்தில் நகர்த்தி வைத்து விட்டு செல்கின்றனர்.இச்செயலால், இந்த ரோட்டில் செல்லும் மற்ற வாகன ஓட்டுநர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இங்கு மீண்டும் நகர்த்த முடியாத படி தடுப்புகள் அமைக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
21-Jan-2025