உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கிராஸ்கட் ரோட்டில் விழா வீதி

 கிராஸ்கட் ரோட்டில் விழா வீதி

கோவை: கோவையின் பெருமையையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் 'கோயம்புத்துார் விழா' கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நடந்து வருகிறது. கோயம்புத்தூர் விழாவின் முக்கிய நிகழ்வாக 'விழா வீதி' வரும், 23ம் தேதி ஞாயிறன்று மாலை 6:00 மணிக்கு, கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு பகுதியில் நடக்க உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும்கலைக்குழுக்கள் இதில் பங்கேற்று கோவையின் மையப்பகுதியில் நிகழ்ச்சியை நடத்தி மக்களை மகிழ்ச்சிப்படுத்த உள்ளனர். இதில் கரகம், படுகர் நடனம், வள்ளிக்கும்மி, நாதஸ்வரம், பறை, ஜமாப், டோல், செண்டை போன்ற இசைக்குழுக்கள், 450 க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு இசைக்க உள்ளனர். கோவை விழா குழுவினரோடு அக்சரா என்டர்டைன்மென்ட், மெட்ரோ ஈவன்ட் குழு இந்த முழு நிகழ்ச்சியை 3 மணி நேரம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை