உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கவுசிகா நதியில் களப்பணி

 கவுசிகா நதியில் களப்பணி

கோவில்பாளையம்: கவுசிகா நதி செல்லும் பாதையில், முதல் கட்டமாக வையம்பாளையத்தில் துவங்கி, பச்சாபாளையம் வரை, 6 கி.மீ., தூரத்திற்கு புனரமைப்பு செய்யும் பணி, கவுசிகா நீர்க் கரங்கள் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், கடந்த அக்டோபரில் துவங்கியது. எட்டாவது வாரமாக, நேற்று கோவில்பாளையத்தில் கவுசிகா நதி பாதையில் களப்பணி நடந்தது. இதில் சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள் மரக்கன்றுகள் நட்டு நீரூற்றினார். கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். ஆர்வம் உள்ளவர்கள் ஞாயிறுதோறும் களப்பணியில் பங்கேற்கலாம் என, தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ