உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா உற்சாகம்

முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா உற்சாகம்

கோவை; பிச்சனுார், ஜே.சி.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2025-26ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. கல்வி நிறுவனங்களின் செயலாளர் துர்கா தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, இணை பட்டய கணக்காளர் ஜெயராமன் பேசுகையில், ''கல்வி என்பது வெறும் புத்தக அறிவு மட்டுமல்ல, வாழ்வை மாற்றும் பெரிய சக்தி. மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.கணினி அறிவியல், வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் தடயவியல் பாடப்பிரிவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காக பைத்தான், டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில், பயிற்சி வழங்கப்படுகிறது என்றும், ஜே.சி.டி., குழுமத்தின் மூத்த முதல்வர் மனோகரன் தெரிவித்தார்.ஜே.சி.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் அன்பரசு, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். ஜே.சி.டி., கலை அறிவியல் கல்லுாரி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க நிகழ்வை, இணை பட்டய கணக்காளர் ஜெயராமன் துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ