உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மோசமான வானிலை கோவை திருப்பப்பட்ட விமானங்கள்

மோசமான வானிலை கோவை திருப்பப்பட்ட விமானங்கள்

கோவை: பெங்களூருவில் மோசமான வானிலை காரணமாக, ஏழு விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன.பெங்களூருவில் மாலை 5:00 மணிக்கு தரையிறங்க வேண்டிய டில்லி - பெங்களூரு விமானம், மாலை 4:50 மணிக்கு தரையிறங்க வேண்டிய, துாத்துக்குடி - பெங்களூரு விமானம், மாலை 4:20 மணிக்கு தரையிறங்க வேண்டிய, விசாகப்பட்டினம் - பெங்களூரு விமானம், மாலை 5:15 மணிக்கு தரையிறங்க வேண்டிய இரு மும்பை - பெங்களூரு விமானம், மாலை 5:05 மணிக்கு தரையிறங்க வேண்டிய போர்ட் லுாயிஸ் - பெங்களூரு விமானம், மாலை 3:30 மணிக்கு தரையிறங்க வேண்டிய சிலிகுரி - பெங்களூரு விமானங்கள், கோவை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.வானிலை சீரடைந்ததும் பயணிகளுடன் விமானங்கள், மீண்டும் பெங்களூருவுக்கு புறப்பட்டு செல்லும் என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை