உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரியில் உணவுத் திருவிழா

கல்லுாரியில் உணவுத் திருவிழா

பொள்ளாச்சி; பூசாரிப்பட்டி, பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில், நோயின்றி வாழவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்தான உணவு, சரிவிகித உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்கும் வகையில் உணவுத் திருவிழா நடந்தது.கல்லுாரி தாளாளர் மகேந்திரன், தலைமை வகித்தார். அவ்வகையில், அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கலப்படம் குறித்து கண்டறிதல், சத்தான உணவு, பாரம்பரிய உணவு வகைகள் என, பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி, 9 அரங்குகள் அமைக்கப்பட்டன. சிற்றுண்டிகள் விற்பனையும் செய்யப்பட்டன. உணவு தயாரிப்பில் ஈடுபட்ட மாணவ, மாணவியரை, கல்லுாரி கல்வி சார் தாளாளர் சிவானிகிருத்திகா, முதல்வர் கண்ணன் ஆகியோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி