உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொடர்ந்து பணி செய்ய நிர்ப்பந்தம் கண்டக்டர் தற்கொலை முயற்சி

தொடர்ந்து பணி செய்ய நிர்ப்பந்தம் கண்டக்டர் தற்கொலை முயற்சி

சூலூர்:தொடர்ந்து பணி புரிய அதிகாரி நிர்பந்தம் செய்ததால், கோவையில் அரசு பஸ் கண்டக்டர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம், சூலூரில் அரசு போக்குவரத்து கழக டிப்போ உள்ளது. கடந்த இரு நாட்களாக, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். சூலூர் டிப்போவில் அனைத்து பஸ்களும் இரு நாட்களாக இயக்கப்பட்டு வந்தன. இங்கு, மதுரை மாவட்டம், பேரையூரை சேர்ந்த நாகராஜன் மகன் பிரதீப், 32 கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். அ.தி.மு.க., ஆதரவு தொழிற்சங்கத்தில் இருக்கும் இவர், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணி செய்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மதியம், 12:30 மணி வரை வேலை செய்து விட்டு, ஓய்வுக்கு செல்வதாக, மேனேஜர் ராஜ்குமாரிடம் கூறியுள்ளார்.அதற்கு அவர், தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும்; இல்லையென்றால், இடமாற்றம் செய்து விடுவதாக கூறியுள்ளார்.இதனால், விரக்தி அடைந்த பிரதீப், அங்குள்ள ஒர்க் ஷாப்பில் இருந்த டீசலை எடுத்து உடல் மீது ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.அப்போது அங்கிருந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு, சூலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் திரும்பினார். போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். சூலூர் போலீசார் சென்று விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை