மெத்தாபீட்டமைன், உயர் ரக கஞ்சா கடத்திய 4 பேர் சிறையில் அடைப்பு
கோவை; சரவணம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சரவணம்பட்டி - துடியலுார் ரோட்டில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஐந்து பேர் நின்றிருந்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், போதைப்பொருளான ஏழு கிராம் மெத்தாபீட்டமைன், குஷ் எனும் உயர் ரக கஞ்சா இருப்பது தெரிந்தது. அவர்களிடம் விசாரித்தனர். கணபதியை சேர்ந்த அமர்நாத், 25, மணியகாரன்பாளையத்தை சேர்ந்த கதிர்வேல், 22, சக்தி முகேஷ், 20, கோவில்மேட்டை சேர்ந்த தஷ்வந்த், 20 எனத் தெரிந்தது. விற்பனைக்காக, பெங்களூருவில் இருந்து மெத்தாபீட்டமைன், புஷ் கஞ்சாவை வாங்கி வந்தது தெரிந்தது. இவர்களுடன் இருந்த அஷ்வின், 22 என்பவர் தப்பினார். கைதானவர்களை சிறையில் அடைத்த போலீசார், ரூ.3 லட்சம் மதிப்பிலான மெத்தாபீட்டமைன், குஷ் கஞ்சா பறிமுதல் செய்தனர். தப்பிய அஷ்வினை தேடி வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட அமர்நாத் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.