இளைஞர்களுக்கு சர்க்கரை நோய் இலவச பரிசோதனை
கோவை: ஏ.ஜிஸ்.ஹெல்த்கேர் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் சென்டர், உலக சர்க்கரை நோய் மாதத்தை முன்னிட்டு, இளைஞர்களுக்கு இலவச சர்க்கரை நோய் பரிசோதனை திட்டத்தை துவக்கியுள்ளது. ஏ.ஜிஸ்.,ஹெல்த்கேரின் இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன் கூறுகையில், ''இந்த ஆண்டு உலக சர்க்கரை நோய் தினத்தின் கருப்பொருளான, 'நீரிழிவும் பணியிடமும்' உள்ளது. அதற்கேற்ப, இந்தியாவிலேயே முதல் முறையாக, ரூ.1,100 மதிப்புள்ள இந்த எச்.பி.ஏ.1.சி எனும் முக்கியமான பரிசோதனை, 25--45 வயதுக்குட்பட்ட பணிக்கு செல்லும் இளைஞர்களுக்கு, இலவசமாக வழங்கப்படுகிறது. சர்க்கரை நோய் நிபுணரின் ஆலோசனையும் வழங்கப்படும்,' ' என்றார். ஏ.ஜிஸ்.ஹெல்த்கேரில், இந்த பரிசோதனையை ஞாயிறு தவிர மற்ற நாட்களில், வரும் 22ம் தேதி காலை 10 முதல் மாலை 6 மணி வரை இலவசமாக பெறமுடியும்.