ஓய்வு பெற்ற போலீசாருக்கு இலவச கண் சிகிச்சை முகாம்
பொள்ளாச்சி:கோவை ஊரக மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம், வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் கடந்த, ஐந்து நாட்களாக தொடர்ந்து நடந்தது. ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் கவுரவ தலைவர் காசிவிஸ்வநாத், தலைவர் செல்வராஜ், செயலாளர் பாலன், பொருளாளர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் பரிசோதனை முகாமில் ஓய்வு பெற்ற காவலர்கள், அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்று பயன் பெற்றனர்.ஆண்டுதோறும் கண் சிகிச்சை முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாசன் ஐ கேர் மருத்துவமனை முதன்மை டாக்டர் தர்மலிங்கம், கண் நரம்பியல் நிபுணர் அனுஷா தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் மைக்கேல் சகாயராஜ் நன்றி கூறினார்.