இலவச நூலகம் திறப்பு விழா
அன்னுார்; அன்னுாரில் இலவச நூலக திறப்பு விழா நேற்று நடந்தது. அன்னுார், சத்தி ரோட்டில், உப்பு தோட்டம் பகுதியில், இலவச நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நூலகத்தை திறந்து வைத்தனர். நூலகத்தில் போட்டித் தேர்வில் பங்கேற்போருக்கு பயன்படும் வகையில் 1,000க்கும் மேற்பட்ட புத்தகங்களும், திராவிட இயக்க வரலாற்றை கூறும் புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. இலவச 'வைபை' வசதியுடன் ஆன்லைன் வாயிலாக கற்க கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தி.மு.க., பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் அம்பாள் நந்தகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.