உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் வினியோகம் அடிக்கடி நிறுத்தம்; பீளமேடு கல்லுாரி நகர் மக்கள் அவதி

மின் வினியோகம் அடிக்கடி நிறுத்தம்; பீளமேடு கல்லுாரி நகர் மக்கள் அவதி

கோவை; கோவையில் கல்லுாரிகள், மருத்துவமனைகள், 'ஷாப்பிங் மால்' உள்ளிட்ட ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் இருக்கும் பீளமேடு சுற்றுவட்டார பகுதிகளில், இரு மாதங்களாக அடிக்கடி மின் தடை, மின் வினியோகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு வருகிறது. பீளமேடு கல்லுாரி நகரிலுள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படும் மின்சாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதால், வீட்டு உபயோகப்பொருட்கள் பயன்படுத்தும் போது, தீப்பொறி பறப்பதும், வெடிப்பது போன்று சப்தம் ஏற்படுகிறது. மின் தடையால் வீடுகளில் வசிப்போர், வர்த்தகர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மாலை நேரத்தில் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இரவில் துாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். கல்லுாரி நகர் மக்கள் கூறுகையில், 'நகர விரிவாக்கம், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தல் போன்ற காரணங்களால் இப்பிரச்னை நீடிக்கிறது. கூடுதலாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைக்கலாம் அல்லது அதிக திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்தால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணலாம்' என்றனர். மின்வாரிய மெட்ரோ மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமாரிடம் கேட்டபோது, ''பீளமேடு பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து புகார் பதிவாகியுள்ளதா என விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி