உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பர்னிச்சர் எக்ஸ்போ கொடிசியாவில் துவக்கம்

பர்னிச்சர் எக்ஸ்போ கொடிசியாவில் துவக்கம்

கோவை;அவிநாசி ரோடு, கொடிசியாவில், மாபெரும் பர்னிச்சர் எக்ஸ்போ நேற்று துவங்கியது.'பிராம்ப்ட் டிரேட் பேர்ஸ்' நிறுவனம் நடத்தும் கண்காட்சியில், பர்னிச்சர், பேஷன் பொருட்கள் மற்றும் இன்டீரியர் உட்பட, வீட்டுக்கு தேவையான பொருட்கள், 120 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பர்னிச்சருக்கு, 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.பர்னிச்சர் அனைத்துக்கும், மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் உத்தரவாதம், பழைய பர்னிச்சரை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வசதியும் உண்டு.கண்காட்சியில், பர்னிச்சர் உட்பட பொருட்கள் வாங்க எவ்வித முன்பணமும் தேவையில்லை. தவணை காலம் நீட்டிக்கப்பட்டு, எளிய தவணைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. வட்டியில்லாமல், சுலப மாதத்தவணை முறையில் பெற, ஸ்பாட் லோன் கடனுதவி வசதியும் உண்டு.டெபிட் மற்றும் கிரெடிட் கார்டையும் பயன்படுத்தலாம். நாளை வரை நடக்கும் கண்காட்சியை, காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி