உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயங்கர ஆயுதங்களுடன்  சுற்றித்திரிந்த கும்பல் கைது

பயங்கர ஆயுதங்களுடன்  சுற்றித்திரிந்த கும்பல் கைது

கோவை; கோவை, சரவணம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சஹாரா சிட்டி என்ற இடத்தில், சந்தேகத்தின் பேரில் ஐந்துபேர் கொண்ட கும்பல் நின்று கொண்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பிக்க முயன்றது. போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் சோதனையிட்ட போது, கத்தி, அரிவாள், இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுங்கள் வைத்திருந்தனர். அவற்றை கைப்பற்றி விசாரிக்கையில், இரவு நேரங்களில் தனியாக செல்லும் நபர்களை வழிமறித்து கொள்ளையடிப்பவர்கள் என தெரியவந்தது. இது தொடர்பாக, சிவானந்தபுரத்தை சேர்ந்த வீரபாண்டி,24, இடிகரை, கோவிந்த நாயக்கன் பாளையத்தை சேர்ந்த ரித்திக்,24, விநாயகாபுரத்தை சேர்ந்த கவுசிக்,21, ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய சிவா, கமலேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !