உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளோபல் ஆர்ட் நிறுவனத்தின் மண்டல அளவிலான ஓவியப்போட்டி

குளோபல் ஆர்ட் நிறுவனத்தின் மண்டல அளவிலான ஓவியப்போட்டி

கோவை; குளோபல் ஆர்ட் நிறுவனத்தின் சார்பில் நடந்த மண்டல அளவிலான ஓவியப்போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி குழந்தைகளின் திறனை வளர்க்க குளோபல் ஆர்ட் நிறுவனம், எஸ்.ஐ.பி., அகாடமி சார்பில் ஆண்டு தோறும், ஓவியப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. பீளமேடு மணி மஹாலில் நடந்த இந்தாண்டுக்கான போட்டிகளை ஹிந்துஸ்தான் சர்வதேச பள்ளி முதல்வர் சுஜா நாயர் துவக்கி வைத்தார். போட்டிகளில் கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, நாமக்கல் ஆகிய பகுதிகளை சேர்ந்த, 500 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர். 5 - 15 வயது வரையிலான மாணவ, மாணவியர் தங்களது ஓவியத்திறனை வெளிப்படுத்தினர். சிறந்த ஓவியங்களை வரைந்தவர்களுக்கு நேஷனல் மாடல் பள்ளியின் துணை முதல்வர் லாவண்யா பரிசுகளை வழங்கினார். குளோபல் ஆர்ட் நிறுவனத்தின் தேசிய தலைவர் நம்ரிதா முகர்ஜி தலைமை வகித்தார். தமிழ்நாடு தலைமை நிர்வாகி மங்கள்சாமி, மேற்கு மண்டல தலைமை நிர்வாகி சபரீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை