உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ்சில் பெண்ணிடம் தங்க செயின் திருட்டு

பஸ்சில் பெண்ணிடம் தங்க செயின் திருட்டு

கோவை: ரயில்நிலையம் அருகில் பஸ்சில் சென்ற பெண்ணின் செயினை திருடி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் யசஸ்வினி, 24. இவர் எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்தார். தனது சான்றிதழ்களை பெறுவதற்காக கடந்த, 24ம் தேதி கோவை வந்தார்.கோவை வந்த அவர், காந்திபுரத்திலிருந்து, பஸ்சில் ரயில் நிலையம் சென்றார். ரயில் நிலையத்தில் இறங்கிய யசஸ்வினிக்கு, தன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க செயின் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை