உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; போலீஸ் மூவர் உட்பட 11 பேர் காயம்

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; போலீஸ் மூவர் உட்பட 11 பேர் காயம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில், போலீஸ் மூவர் உட்பட, 11 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தால், பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு, 20க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக்கொண்டு, காலை, 6:00 மணிக்கு அரசு பஸ் சென்றது. பஸ்சை, டிரைவர் சுந்தரசாமி ஓட்டிச் சென்றார்.சி.டி.சி., மேடு தனியார் பள்ளி அருகே சென்ற போது, 'கட்' ரோட்டில் இருந்து லாரி குறுக்கே வந்தது. இதை கண்டு சுதாரித்த பஸ் டிரைவர், பஸ்சை வலது பக்கமாக திருப்பினார்.அப்போது, கோவையில் இருந்து முதல்வர் விழாவுக்காக மக்களை அழைத்து செல்வதற்காக பொள்ளாச்சி நோக்கி வந்த பயணியர் இல்லாத அரசு பஸ் மீது, கோவை சென்ற அரசு பஸ் மோதியது.பொள்ளாச்சியில் இருந்து கோவை சென்ற பஸ்சில் இருந்த பயணியர் அவ்வழியாக வந்தோர் மற்றும் மகாலிங்கபுரம் போலீசார் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர்.முதல்வர் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக, பொள்ளாச்சியில் இருந்து சென்ற, போலீஸ் ஏட்டு மோகன செல்வி,51, ஏட்டு பிரேமலதா, 42, போலீஸ் வியஜபாண்டி மற்றும், பஸ் டிரைவர் சுந்தரசாமி, 47, கோவையில் இருந்து வந்த பஸ் டிரைவர் முருகேசன்,37, பயணியர் ஆனந்தி,59, ஜெகநாதன்,46, சங்கமிபாரதி,40, மணிகண்டன்,39, மாரியம்மாள்,39, கண்ணையன்,61 ஆகிய 11 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த மகளிர் போலீஸ் ஏட்டு மோகன செல்வி, 51, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பரபரப்பு

பொள்ளாச்சி - கோவை ரோட்டில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதால், பரபரப்பு ஏற்பட்டது. பஸ்கள் மோதிய சம்பவத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.விபத்தில் காயமடைந்தோரை மீட்க, ஆம்புலன்ஸ்கள் சைரன் ஒலித்தவாறு வேகமாக சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை