உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கேரம் போட்டியில் வச்ச குறி தப்பாது; அசத்திய அரசு பள்ளி மாணவ, மாணவியர்

கேரம் போட்டியில் வச்ச குறி தப்பாது; அசத்திய அரசு பள்ளி மாணவ, மாணவியர்

கோவை; மாவட்ட அளவிலான 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் ஆக. 26ம் தேதி முதல் நடந்துவருகிறது. பள்ளி, கல்லுாரி, மாணவ, மாணவியருக்கு எஸ்.என்.ஆர். கல்லுாரியில் மூன்று நாட்கள், கேரம் போட்டிகள் நடந்தன. பள்ளி மாணவர்களுக்கான இரட்டையர் பிரிவில், 88 அணிகள் பங்கேற்றன. நிறைவில், இவாஞ்சலின் மெட்ரிக் பள்ளி, வெள்ளலுார் அரசுப் பள்ளி, பீளமேடு அரசுப் பள்ளி ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்தன. மாணவர்களுக்கான (இரட்டையர்) போட்டியில், 29 அணிகள் விளையாடின. இதில், காளப்பட்டி அரசுப் பள்ளி, எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் மாநகராட்சி பள்ளி, சி.சி.எம்.ஏ. பள்ளி ஆகியன முதல் மூன்று இடங்களை வென்றன. மாணவர்களுக்கான ஒற் றையர் பிரிவில், ஸ்டேன்ஸ் பள்ளி மாணவர் ஹரிஹரன், பீளமேடு மாநகராட்சி பள்ளி மாணவர் பரணிதரன், எஸ்.எஸ்.குளம் அரசுப் பள்ளி மாணவர் விஷ்ணுவர்தன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை தட்டினர். மாணவியர்(ஒற்றையர்) பிரிவில், சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி மாணவி பிரீத்தி, பி.எஸ்.ஜி. சர்வஜன பள்ளி மாணவி சோபனா, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பள்ளி ஹர்திகா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !