உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு போட்டிகளிலும் அசத்திய அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி

இரு போட்டிகளிலும் அசத்திய அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி

கோவை; ஐ.பி.ஏ.ஏ., பேட்மின்டன் மற்றும் பால் பேட்மின்டன் போட்டியில் கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் 'இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேசன் தமிழ்நாடு அண்ட் புதுச்சேரி'(ஐ.பி.ஏ. ஏ.,) பால் பேட்மின்டன் மற்றும் பேட்மின்டன் போட்டிகள் நடந்தது.கோவை டிவிஷன் அளவில் பெண்களுக்கான இப்போட்டியில் ஐந்து அணிகள் பங்கேற்றன. பேட்மின்டன் போட்டியில் கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணியை வென்று முதலிடம் பிடித்தது.ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது. பால் பேட்மின்டன் இறுதிப்போட்டியில், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அணி, 2-0 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் அணியை வென்று முதலிடம் பிடித்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் அணி, 2-0 என்ற செட் கணக்கில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் அணியை வீழ்த்தி மூன்றாம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கிரிராஜ் டிராபி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ