உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமையல்காரருக்கு இழப்பீடு தராததால் அரசு பஸ் ஜப்தி

சமையல்காரருக்கு இழப்பீடு தராததால் அரசு பஸ் ஜப்தி

கோவை:விபத்தில் தலையில் காயம்பட்ட சமையல்காரருக்கு, இழப்பீடு தராததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.கோவை, மசாக்காளிபாளையம் ரோடு, உப்பிலிபாளையத்தை சேர்ந்த சமையல்காரர் ஆரோக்கியசாமி,50. 2016, செப்., 29ல், சவுரிபாளையத்தில் பைக்கில் சென்றார். எதிரே வந்த அரசு பஸ் மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார்.இழப்பீடுகோரி, கோவை எம்.சி.ஓ.பி., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அவருக்கு அரசு போக்குவரத்து கழகம், ஒன்பது லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென, 2019, டிசம்பரில் கோர்ட் உத்தரவிட்டது.இழப்பீடு வழங்காமல், நான்கு ஆண்டுகளாக இழுத்தடித்து வந்ததால், வக்கீல் தனராஜ் வாயிலாக அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவின் பேரில், தடம் எண்:11, அரசு டவுன் பஸ் ஜப்தி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை