உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின், 4வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கத்தில் நடந்தது.கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு வேளாண் பல்கலை., துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.இவ்விழாவில், பி.காம்., (பி.ஏ.,), பி.காம்., (சி.ஏ.,), பி.ஏ., (பொருளாதாரம்), பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்.சி., கணிதம் ஆகிய 6 பாடப்பிரிவுகளை சேர்ந்த, 226 மாணவ, மாணவிகள் இளங்கலை பட்டம் பெற்றனர். இதில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை