கதிர் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கோவை; நீலாம்பூர், கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நடந்தது. லீ ராயல் நிறுவனத்தின் தலைவரும், பி.ஜி.பி., கல்விக் குழுமத்தின் தலைவருமான, பழனி பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசுகையில், ''கல்வி என்பது வெறும் பட்டம் பெறுவதற்கான பயணம் மட்டுமல்ல, வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம். உங்கள் திறனை நம்பி, புதிய முயற்சிகளில் அஞ்சாமல் ஈடுபடுங்கள். சூழ்நிலைகளுக்கேற்ப நம்மை தகவமைத்துக்கொள்ள வேண்டும். தொடர் கற்றலால் நம்மை புதுப்பித்துக்கொண்டால் வாழ்வில் வெற்றி தேடி வரும்,'' என்றார். கதிர் கல்விக் குழுமத்தின் தலைவர் கதிர், செயலர் லாவண்யா, துணைத் தலைவர் மிதிலேஷ், இணைச்செயலர் விது பிரதிக்ஷா, கல்லுாரி கற்பகம் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.