பசுமையும் பாரம்பரியமும் 5 பிரிவுகளில் கலைப்போட்டி
கோவை; அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி சாரா திறமைகளை ஊக்குவிக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள், ஆகஸ்ட் 4ம் தேதியிலிருந்து தொடங்கவுள்ளன. இதில், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடப் போட்டி, பேச்சுப் போட்டி, பரதநாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்படவுள்ளன. பள்ளி அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், குறுவட்டம், வட்டாரம், மாவட்டம் அளவில் தகுதிபெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர். வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டிகள்,1 முதல் 12ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாகவும் ஐந்து பிரிவுகளில், 'பசுமையும் பாரம்பரியமும்' என்ற தலைப்பில் நடத்தப்படுகின்றன.