உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் கோடை விழா கலெக்டர் அறிவிப்பால் மகிழ்ச்சி

வால்பாறையில் கோடை விழா கலெக்டர் அறிவிப்பால் மகிழ்ச்சி

வால்பாறை; வால்பாறையில் இம்மாத இறுதியில், கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.வால்பாறை நகராட்சி சமுதாய நலக்கூடத்தில், மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் வரவேற்றார்.முகாமில், 171 பயனாளிகளுக்கு, 3.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாவட்ட கலெக்டர் பேசியதாவது:மக்கள் தொடர்பு முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது, உடனடியாக தீர்வு காணப்படும். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையில், வனப்பகுதியில் கிடைக்கும் விவசாய பொருட்களை மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வாயிலாக, விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தன்னார்வலர்கள் வாயிலாக அடிப்படை வசதிகள், சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சில திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் வால்பாறை மலைப்பகுதியில் அதிகளவில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.ஊட்டி, கொடைக்கானலை போன்று கோவை மாவட்டம் வால்பாறையிலும் மாத இறுதியில் கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, பேசினார்.நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கீதா, தாட்கோ மேலாளர் மகேஸ்வரி, நகராட்சி கமிஷனர் ரகுராமன் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ