மேலும் செய்திகள்
கோடை வெயில் அதிகம் கவனமாக இருக்க அறிவுரை
21-Mar-2025
கோவை : தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின் படி, அனைத்து மின் இணைப்புகளிலும் ஆர்.சி.டி., (ரெசிடுயல் கரன்ட் டிவைஸ் )என்ற உயிர் காக்கும் கருவியை பொருத்தவேண்டும். மின் விபத்துக்கள், மின் சிக்கனம் குறித்து மின்வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், உரிய விழிப்புணர்வு இன்றி மின் விபத்துக்கள் அரங்கேறுவது தொடர்கதையாக உள்ளது. புதிதாக கட்டப்படும் வீடுகள் மட்டுமின்றி, பழைய வீடுகளிலும் ஆர்.சி.டி., எனும் கருவியை பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணி கூறியதாவது: மின்சாதனங்கள் சரிவர கையாளப்படாத சூழலில், மின்சாரம் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும். மின் விபத்துக்களை தடுக்கும் வகையில், 30 மில்லி ஆம்பியர் திறனுடைய ஆர்.சி.டி., அமைப்பை ஏற்படுத்தவேண்டும். வீட்டில் உள்ள அனைத்து மின்சாதனங்கள், இதன் வாயிலாக மின்சாரம் பெறும் வகையில் இணைக்கப்பட வேண்டும். இதனால், மின்கசிவு, ஈரமான சாதனம், மின் பழுதுகள் ஏற்படும் போது மின்சப்ளையை உடனடியாக தானாக நிறுத்திவிடும். புதிய மின் இணைப்புகள் ஆர்.சி.டி., இருந்தால் மட்டுமே வழங்கப்படுகிறது. குழந்தைகள், முதியோர்கள் உள்ள வீடுகளில், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடனடியாக, ஆர்.சி.டி., பொருத்தி மின்விபத்துக்களில் இருந்து காத்துக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
21-Mar-2025