உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைப்பகுதியில் கனமழை பெய்யலாம்

மலைப்பகுதியில் கனமழை பெய்யலாம்

கோவை; கோவை, வேளாண் பல்கலையில் உள்ள, வேளாண் கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை: இன்றும், நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாவட்டத்தின் இதர பகுதிகளில், சாரல் மழை பெய்யக்கூடும். சாதகமான பருவநிலையைப் பயன்படுத்தி, களையெடுத்தல், பூச்சிக்கொல்லி தெளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். குறுகிய கால சம்பா நெல் சாகுபடிக்காக நிலத்தைத் தயார்படுத்தலாம். தீவனத்துக்காக சோளம் பயிரிடலாம். இறவை மற்றும் மானாவரி என மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம். அறுவடை செய்த நிலக்கடலையை 8 சதவீத ஈரப்பதத்துக்கும் குறைவாக பராமரித்து, இருப்பு வைக்கலாம். காற்று வேகமாக வீசும் என்பதால், கரும்பு தோகையை உரிப்பது நல்லது. 5 மாதங்களான வாழைக்கு முட்டுக் கொடுக்கவும். இவ்வாறு, கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ