உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நெடுஞ்சாலை பாலம்; மண் கொட்டி அடைப்பு

நெடுஞ்சாலை பாலம்; மண் கொட்டி அடைப்பு

அன்னூர்;அன்னூர் பேரூராட்சி பகுதியில், கடந்த அக்டோபர் மாதம் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் பழனி கிருஷ்ணா அவென்யூவில் பல மாதங்களாக தேங்கியுள்ள நீரால் பல வீடுகளின் சுவர்கள் பாதிக்கப்பட்டன.இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை சிலர் கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் கிழக்குப் பகுதியில் ஒரு டிப்பர் லோடு மண்ணை கொட்டி பாலத்தை அடைத்தனர். இதனால் மேற்கு பகுதியில் இருந்து பாலம் வழியாக கிழக்குப் பகுதிக்கு செல்லும் நீர் தடைபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை