இந்து முன்னணி போலீசில் புகார்
கோவை; பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.பா.ஜ., அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி, கடந்த ஏப்., 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு, செஞ்சிலுவை சங்கம் அருகில், த.மு.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மத்திய அரசுக்கும், இந்துக்களுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், சில இஸ்லாமியர் கோஷங்கள் எழுப்பினர்.இந்திய இறையான்மைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் தொண்டர்கள் பலர், ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளனர்.