உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு; பயனாளிகளுக்கு நாளை குலுக்கல்

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு; பயனாளிகளுக்கு நாளை குலுக்கல்

கோவை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், பெரியநாயக்கன் பாளையம் திட்டப்பகுதியில், 1,800 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. பங்களிப்பு தொகையை முழுமையாக செலுத்தியுள்ள, 816 பயனாளிகளுக்கு மட்டும் குடியிருப்புகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வரும், 2ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை குலுக்கல் நடைபெற உள்ளது.சம்பந்தப்பட்ட பயனாளிகள், கோவை வீட்டு வசதி வாரியம் மூலம் வழங்கப்பட்ட தகவல் கடித நகல், பணம் செலுத்தியதற்கான அசல் ரசீது, ஆதார் அட்டை நகல் (கணவன் மற்றும் மனைவி), பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2, ஸ்மார்ட் ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் ஆகிய ஆவணங்கள் கொண்டு வர வேண்டும் என, வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை