உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டு போடுவது எப்படி? மின்னணு மிஷினில் டெமோ

ஓட்டு போடுவது எப்படி? மின்னணு மிஷினில் டெமோ

வால்பாறை- தேர்தல் கமிஷன் சார்பில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வாயிலாக, ஓட்டுப்பதிவு செய்வது குறித்து, தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் கமிஷன் சார்பில் வாக்காளர்களிடையே, ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இந்நிலையில், தேர்தல் கமிஷன் சார்பில் வால்பாறையில் கடந்த மூன்று நாட்களாக வாகன பிரசாரம் செய்யப்படுகிறது. அரசு கலைக்கல்லுாரி மாணவர்களுக்கு நேற்று காலை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியை தாசில்தார் வாசுதேவன், கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.அதன்பின், வால்பாறை அடுத்துள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வாயிலாக, ஓட்டு போடுவது குறித்தும், எல்.இ.டி., திரையில் யாருக்கு ஓட்டு பதிவானது என்பதை அறிவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து, கிராமிய கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை