உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயத்தில் புதுமை தொழில்நுட்ப பயிற்சி

விவசாயத்தில் புதுமை தொழில்நுட்ப பயிற்சி

கோவை; தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழிநுட்ப கவுன்சில், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியின், கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புத்துறை சார்பில், 'விவசாயத்தில் புதுமை தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை கல்லுாரியில் நடந்தது. நம்மாழ்வார் விருது பெற்ற சம்பத்குமார், பழனிசாமி மற்றும் மதுபா ராமகிருஷ்ணன், சூலுார் செந்தில், வேளாண் பல்கலை பேராசிரியர் கல்பனா ஆகியோர் சிறப்புரையாற்றினர். நவீன வேளாண் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள், டிரோன் பயன்பாடு, மின்னணு சந்தை, மதிப்பூட்டப்பட்ட தயாரிப்புகள், தன்னிறைவு வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், நிபுணர்கள் உரையாற்றினர். விவசாயிகள், தொடக்க நிறுவன மேம்பாட்டு மைய உறுப்பினர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை