உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுச்சாவடி மையங்களில் சப்- கலெக்டர் ஆய்வு

ஓட்டுச்சாவடி மையங்களில் சப்- கலெக்டர் ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் வசதிகள் குறித்து சப் - கலெக்டர் ஆய்வு செய்தார்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதையடுத்து, அதிகாரிகள் குழுவினர் அதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர், பொள்ளாச்சி தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டு தேவையான வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அதை தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, இளம் வாக்காளர்கள் சேர்க்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் ஓட்டு அளிப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இந்நிலையில், லோக்சபா தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், வரும், 23ல் தமிழகம் வருகின்றனர். தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை, 28ம் தேதிக்குள் முடிக்க, தேர்தல் பிரிவினருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், அனைத்து ஓட்டுச்சாவடிகளையும் பிப்., இறுதிக்குள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இம்மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்படி, பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமையில், தாசில்தார் ஜெயசித்ரா, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களை ஆய்வு செய்தனர்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மொத்தம், 269 ஓட்டுச்சாவடி மையங்களில் நேரடியாக ஆய்வு செய்து, கழிப்பிடம், குடிநீர், சாய்வு தளம் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. சிறு குறைபாடுகள் உள்ளதை கண்டறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாயிலாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை