உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோழிகளுக்கு ராணிகட் நோய்  தடுப்பூசி செலுத்த  அறிவுறுத்தல் 

கோழிகளுக்கு ராணிகட் நோய்  தடுப்பூசி செலுத்த  அறிவுறுத்தல் 

கோவை:கோவையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை, 33-34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. உயர்ந்து வரும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக, அறுவடை செய்த சம்பா நெல் மணிகளை காலை, 9:00 முதல் 11:00 மணி வரையும், மதியம் 3:00 முதல் 5:00 மணி வரையும் உலர்த்தவும்.காற்றின் வேகம் 8-10 கி.மீ., வரை காணப்படுவதால், 5 மாதங்களுக்கு மேலான வாழை மரங்களுக்கு முட்டு கொடுக்கவும். வாழையில் பாக்டீரியா குருத்து அழுகல் நோய் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த, பிளிச்சீங் பவுடரை ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 20 கிராம் வீதம் கலந்து கன்றின் அருகில் ஊற்றவேண்டும்.நிலவும் வானிலையை கருத்தில் கொண்டு, அறுவடை செய்த மஞ்சள் கிழங்கினை பதப்படுத்தி சந்தைப்படுத்தவும். தற்போதைய வானிலையால், வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு, ராணிகட் நோய் வரவாய்ப்புள்ளது. இதனால், அருகாமையில் உள்ள கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை