உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட நீதிபதி பணிக்கு நேர்முக தேர்வு

மாவட்ட நீதிபதி பணிக்கு நேர்முக தேர்வு

கோவை;காலியாகவுள்ள மாவட்ட நீதிபதி பணியிடத்திற்கு, நேர்முக தேர்வு இன்று நடக்கிறது. தமிழக நீதித்துறையில் காலியாகவுள்ள, 18 மாவட்ட நீதிபதி பணியிடங்கள், 10 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, 130 சீனியர் சிவில் நீதிபதிகளுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, 88 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், கோவை மாவட்டத்தில் பணியாற்றும், சிவில் கோர்ட் நீதிபதிகள் ஆறு பேரும் அடங்குவர். இவர்களுக்கு, சென்னையில் இன்று நேர்முக தேர்வு நடக்கிறது. இதில், தேர்வு செய்யப்படுவோருக்கு மாவட்ட நீதிபதியாக, பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை