உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பணியிடத்துக்கு நேர்காணல்

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பணியிடத்துக்கு நேர்காணல்

கோவை; நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணியிடங்களுக்கான நேர்காணலில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மாநகராட்சியில், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. தவிர, மூன்று பொது சுகாதார ஆய்வகங்களில் நகர சுகாதார செவிலியர்கள், மருந்தாளுனர், லேப் டெக்னீசியன், பல்நோக்கு மருத்துவபணியாளர்கள் என, 20க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள், முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நேற்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.வயது, கல்வித்தகுதி, மதிப்பெண், தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் பதிவு சான்றிதழ், முன்அனுபவச்சான்றிதழ், இருப்பிடம், மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவைக்குரிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றுடன் நேரில் ஆஜராகுமாறு, விண்ணப்பதாரர்களுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, நேற்று காலை, 10:00 மணி முதல், 100க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று ஆவணங்களை சமர்ப்பித்தனர். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என, மாநகராட்சி சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை