உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோபோடிக் மூட்டு மாற்று சிகிச்சை முறை அறிமுகம்

ரோபோடிக் மூட்டு மாற்று சிகிச்சை முறை அறிமுகம்

கோவை : ஆர்த்ரைடிஸ் எனப்படும், முடக்குவாத பிரச்னையை குணப்படுத்த, அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட, 'கோரி ரோபோட்டிக்' மூட்டு மாற்று கருவியை, கே.எம்.சி.எச்., அறிமுகம் செய்துள்ளது.செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் இந்த கருவி, அறுவை சிகிச்சையை மிகத்துல்லியமாகவும், சுலபமாகவும் விரைவாகவும் செய்து முடிக்க உதவுகிறது. மென்மையான திசுக்களைப் பாதுகாத்து, நோயாளி விரைவில் குணமடைய உதவுகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக, சி - ஆர்ம் என்ற இமேஜிங் கருவியையும், கே.எம்.சி.எச்., அறிமுகம் செய்துள்ளது. இது, எலும்புகள் மறுகட்டமைப்பு முதலான சிக்கலான சிகிச்சைகளை மேம்பட்ட திறனுடன் செய்திட உதவுகிறது. கே.எம்.சி.எச்., மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமி கூறுகையில், ''வரும் மே 31ம் தேதி வரை, எங்கள் மருத்துவமனையில், ரோபோட்டிக் மூட்டு மாற்று முகாம் நடக்கிறது. இம்முகாமில், ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, 20 சதவீத சலுகை கட்டணத்தில் அளிக்கப்படுகிறது,'' என்றார்.மேலும் விபரங்களுக்கு, 73393 33485 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ