மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாமுக்கு அழைப்பு
கவுண்டம்பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 1 முதல், 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ முகாம் வரும் 11ம் தேதி நடக்கிறது. கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில், காலை 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடக்கிறது. பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் குழந்தைகள், மாற்றுத்திறன் அறிகுறி உள்ள குழந்தைகள் மற்றும் அடையாள அட்டை புதுப்பிக்காமல் இருக்கும் குழந்தைகள், யூ.டி.ஐ.டி., பெறாமல் இருக்கும் குழந்தைகள், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாத குழந்தைகள் மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படும் குழந்தைகள் என, அனைவரது பெற்றோரும் பங்கேற்கலாம். 5 பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் கார்டு ஜெராக்ஸ், தேசிய மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள் ளது.