பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர அழைப்பு
அன்னுார் : அன்னுார் அருகே சொக்கம்பாளையத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர், மாணவியர், பிற்படுத்தப்பட்ட மாணவியர், ஆதிதிராவிடர் மாணவர், மாணவியருக்கு என ஐந்து விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. கோவில்பாளையம் மற்றும் காரமடையில் பிற்படுத்தப்பட்ட மாணவருக்கு விடுதிகள் உள்ளன.நான்காம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர், இலவசமாக தங்கி கல்வி கற்கலாம். மூன்று வேளை உணவு, தரமான விடுதி வசதி உள்ளது. மாதம் 100 ரூபாய் வழங்கப்படுகிறது. மாதத்தில் நான்கு முறை அசைவ உணவு வழங்கப்படுகிறது. 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்படும். ஆண்டுக்கு நான்கு ஜோடி பள்ளி சீருடை, பாய், தலையணை, போர்வை ஆகியவை கட்டணம் இன்றி வழங்கப்படுகிறது.செஸ் போர்டு, கேரம்போர்டு, ரிங் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. 'டிவி' வசதி உள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் விடுதிக்கு 93605 99997 என்னும் மொபைல் எண்ணையும், மாணவர் விடுதிக்கு 96008 29396 என்னும் மொபைல் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். கோவில்பாளையம் மற்றும் காரமடையில் காரமடை விடுதியில் சேர 88259 28277, என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,' என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.